மஞ்சள் நிலாவுக்கு ...

Sunday, 4 July 2010

தோற்றப்பிழை


ஞாயிறுகளில் பொழுது புலரும் போதே
ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.
ஆண்மக்கள் ஓய்வெடுக்க
பெண்மக்கள் இன்றும் உழைக்க...
ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.

எட்டுக்கு பிள்ளையும்,
பத்துக்கு புருசனும்
எழும் முன்னே காலை உணவும்,
மதியம் உண்ண கறி உணவும்
சமைத்து விட்டு,
நான் சாப்பிட நேரமிருக்காது.

வாரமாய் சேர்ந்த அழுக்காடைகள்...
கொட்டிக் கிடக்கும் குப்பைகள்...
சிதறிய நாளிதழ்கள்...
உண்டு தூங்கும் கணவனின்
தூக்கம் கலைக்காமல்
அறை கூட்டி முடிக்கையில்
மணி மதியம் மூன்று.

குளிக்கச் செல்கையில்
பசியோடு வந்தான் என் பிள்ளை.
பரிமாறிவிட்டு நான் உண்ண உட்கார்ந்தால்,
புருசனின் துணிகள் இன்னும்
தேய்க்கப்படவில்லையாம்.

இனியேது எனக்குப் பசி?
சமையலறை ஒழித்து
தொலைக்காட்சியில் படம் பார்க்க
அமர்ந்த வேளையில்,
வந்தது சொந்தக்காரர்கள் கூட்டம்.

ஓய்ந்தொழிந்து தூங்கப்போனேன்.
புருசனின் பசியில் என் பசி அடங்கிற்று.

ஏனின்று விடுமுறை என்றே தோன்றும்.
இனி வேண்டாம் ஞாயிறு விடுமுறை.
தேவை இனி திங்கள் விடுமுறை.

Labels:

16 Comments:

  • At 4 July 2010 at 10:34 pm , Anonymous Anonymous said...

    :)) நல்லாருக்கு

     
  • At 5 July 2010 at 7:09 am , Blogger Unknown said...

    தொடர்ந்து எழுதுங்க..
    வாழ்த்துக்கள்..!
    :)

     
  • At 6 July 2010 at 12:49 pm , Blogger மஞ்சள் நிலா said...

    மயில்,
    வருகைக்கு நன்றி.

     
  • At 6 July 2010 at 12:50 pm , Blogger மஞ்சள் நிலா said...

    இளங்கோ,
    உங்கள் வாழ்த்துக்களால் தொடர்ந்து எழுதுவேன்.
    நன்றி.

     
  • At 7 July 2010 at 7:56 pm , Blogger தமிழ்பாலா said...

    குடும்ப உறுப்பினர் எல்லாமே ஒன்றாகி எல்லா வேலையிலும் பங்கெடுத்து வாழும் புதிய தலைமுறை உருவாகிவருகின்ற வேளையிது அடுப்பங்கரை பெண்ணுக்குமட்டும் சொந்தமல்ல!
    வீட்டுவேலை பெண்ணுக்குமட்டும் பட்டா போட்டு யாரும் தரவில்லை,உங்கள் படைப்பு சிறப்பாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்கள் முன்னோக்கி எழுதுங்கள் ,முற்போக்காய் எழுதுங்கள், முத்தாய்ப்பாய் எழுதுங்கள்!இன்னும் இன்னும் இன்னும் எழுதுங்கள்!

     
  • At 10 July 2010 at 3:43 pm , Blogger ஹேமா said...

    வார இறுதிக் கடுகதி வாழ்வு.அழகாய் அடுக்கப்பட்டிருக்கிறது.வீட்டுக்கு வீடு வாசல்படிதான் தோழி.ஆனாலும் வேறு வழி?சந்தோஷமும் கூட !

    சொல்லப்போனால் எங்களிலும் பிழை இருக்கு.பாசம் அன்புன்னு சொல்லிச் சொல்லி அவரவர் வேலைகளை ஓரளவு பங்கிட்டுக் கொடுக்கத் தவறுகிறோம்.

    அதற்காக திங்கள் விடுமுறையென்றால்....!

     
  • At 16 July 2010 at 1:43 pm , Anonymous Anonymous said...

    //ஆண்மக்கள் ஓய்வெடுக்க
    பெண்மக்கள் இன்றும் உழைக்க...//

    சிந்திக்க வேண்டிய விசயம்..
    atleast i will give a rest,மனைவி வந்த உடன்..
    அறிவுரைக்கு நன்றி......

     
  • At 17 July 2010 at 1:57 pm , Blogger மஞ்சள் நிலா said...

    தமிழ் பாலா ...
    //குடும்ப உறுப்பினர் எல்லாமே ஒன்றாகி எல்லா வேலையிலும் பங்கெடுத்து வாழும் புதிய தலைமுறை உருவாகிவருகின்ற வேளையிது//

    இப்படி சொல்லி வேண்டுமானால் ஆறுதல் பட்டுக் கொள்ளாலாம்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    தங்கள் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

     
  • At 17 July 2010 at 1:58 pm , Blogger மஞ்சள் நிலா said...

    ஹேமா..
    //அதற்காக திங்கள் விடுமுறையென்றால்....!//

    ஒரு ஆதங்கத்திற்க்கான ஏக்கம் தான் தோழி ...
    வருகைக்கு நன்றி தோழி.

     
  • At 17 July 2010 at 2:00 pm , Blogger மஞ்சள் நிலா said...

    கோவை குமரன்...
    இது அறிவுரையல்ல.
    எண்ணத்தின் வெளிப்பாடு. அது உங்களை சிந்திக்க வைத்தது எனில், மகிழ்ச்சியே.

     
  • At 24 July 2010 at 12:56 pm , Blogger சே.வேங்கடசுப்ரமணியன் said...

    நச்..கவிதை

     
  • At 25 July 2010 at 12:48 am , Blogger உலகம் சுற்றும் வாலிபன் said...

    அருமையான கவிதை.
    உழைக்கும் பெண்களின் உள் மன வெளிப்பாடுகளின் திரட்டு.
    தொடரவும்.

     
  • At 25 July 2010 at 12:50 am , Blogger மஞ்சள் நிலா said...

    வெங்கடசுப்ரமணியம் சார்,

    தங்களின் வருகைக்கு நன்றி.

     
  • At 25 July 2010 at 12:52 am , Blogger மஞ்சள் நிலா said...

    உலகம் சுற்றும் வாலிபன்,
    பெண்களின் எண்ண உணர்வுகளை பிரதிபலித்துள்ளேன். அவ்வளவே.
    நன்றி தங்களின் வருகைக்கு.
    (அதென்ன பேரு, உலகம் சுற்றும் வாலிபன்? எந்தெந்த ஊர் சுத்தீருக்கீங்க?)

     
  • At 25 July 2010 at 7:57 am , Blogger ஜெயந்திமணி said...

    ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடு.என் உள்ளே இருந்ததை உங்கள் வரிகளில் படித்தபோது ....சரியா சொல்லிட்டாப்பா....என்பதான சந்தோஷம்..உண்மையில் நச் கவிதை.வாழ்த்துக்கள் சகோதரி.

     
  • At 5 August 2010 at 9:02 am , Anonymous Sweatha Sanjana said...

    I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home